சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காவல்துறை மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் சிவகங்கை காவல் உட்கோட்டம் சோழபுரம் ஜஸ்டின் பெண்கள் கல்லூரியில் அரசியல் சாசன தினம் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் இ.கா.ப அவர்களின் வழிகாட்டுதலின்படி சிவகங்கை சமுக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் புருசோத்தமன், சிவகங்கை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் சிறப்பு வழக்கறிஞர் துசாந்த் பிரதீப் குமார், புள்ளியியல் ஆய்வாளர் கண்ணதாசன், கல்லூரி முதல்வர் பிரிந்தா, சார்பு ஆய்வாளர் . மணிகண்ட பிரபு சிறப்பு சார்பு – ஆய்வாளர்கள் ஜோதிமணி பிரேமலதா,வளர்மதி அறிவழகன், மஹேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அரசியல் சாசன உறுதிமொழி மற்றும் தீண்டாமை உறுதி மொழி எடுக்கப்பட்டது. கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட ஓவியப் போட்டியில் முதல் பரிசு பிரியதர்ஷினி 2ம் பரிசு பிரதிபா 3ம் பரிசு ஸ்ரீலேகா, வெற்றி பெற்றனர். அரசியல் சாசனம் பற்றிய வினாடி வினா போட்டியில் 30 பேர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி