கர்நாடக மாநிலம் : குடிபோதையில் கல்லூரிக்கு வந்து ,அந்த காலேஜிலிருக்கும் பெண் பேராசிரியர்களின் கழிவறைக்கு சென்று தகாத முறையில் நடந்த பேராசிரியருக்கு செருப்படி விழுந்தது. கர்நாடக மாநிலம் பெலகாவி டவுனில் அரசு சர்தார் பி.யூ. கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் அமித் பசவமூர்த்தி என்பவர் ஆங்கில பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தினமும் கல்லூரிக்கு மது அருந்தி விட்டு வந்து மாணவர்களுக்கு பாடம் எடுத்து வந்தார் .மேலும் அங்கு பணிபுரியும் பெண் பேராசியர்களிடமும் தகாத முறையில் நடந்து கொள்வாராம் .
இது பற்றி அந்த கல்லூரி நிர்வாகத்திடம் பல பெண்கள் புகாரளித்தும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த அமித் குடித்து விட்டு பெண்கள் டாய்லெட்டுக்குள் புகுந்து அங்கு ஒளிந்து கொண்டு அந்த பாத்ரூம் வரும் பெண் பேராசிரியர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். இதனால் அங்கிருந்த பெண் பேராசிரியர்கள் அணைவரும் ஒன்று சேர்ந்து கொண்டு அந்த பேராசிரியர் அமித்தை செருப்பால் அடித்துள்ளனர் .இதை யாரோ சிலர் வீடியோ எடுத்து சமூக ஊடகத்தில் வெளியிட்டு, போலீசிலும் புகாரளித்துள்ளனர் , அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.