சென்னை : வேப்பேரியில் உள்ள தனியார், கல்லுாரி நிர்வாகி வீட்டில், 1 கோடி ரூபாய் மதிப்பிலான, தங்கம், வைர நகைகள் மற்றும் 3 லட்சம் ரூபாய், திருடுபோன சம்பவம் தொடர்பாக, அங்கு வீட்டு வேலை பார்த்து வந்த பீஹார் வாலிபரைகாவல்துறையினர், தேடி வருகின்றனர். சென்னை, வேப்பேரி, ஈ.வி.கே., சம்பத் சாலையில் குடும்பத்துடன் வசித்து வருபவர் விகாஷ், முனோத், (45), தொழில் வர்த்தகரான இவர், துரைப்பாக்கம் ஜெயின் கல்லுாரி, நிர்வாகியும் ஆவார். இவரது வீட்டில், இரண்டு மாதங்களுக்கு முன், பீஹாரைச் சேர்ந்த கரண், (22), என்பவர் வேலைக்கு சேர்ந்தார்.
அவருக்கு, வீட்டை சுத்தம், செய்யும் பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. கடந்த 2ம் தேதி நண்பர்களை பார்த்து வருவதாக கூறிச்சென்ற கரண், பின் வேலைக்கு திரும்பவில்லை. இந்த நிலையில், நேற்று காலை 10:30 மணியளவில், படுக்கை அறையில் இருந்த அலமாரி திறந்து கிடப்பதை விகாஷ் முனோத்தின் வனித்துள்ளார். அதில் சோதனை செய்தபோது, 1 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், மற்றும் வைர நகைகள், 3 லட்சம் ரூபாய் உள்ளிட்டவை, திருடு போனது தெரிய வந்தது. அவற்றை, கரண், திருடிச் சென்றதாக விகாஷ் முனோத், வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர், கரணை தேடி வருகின்றனர்.