மதுரை: உலகம் முழுவதும் உள்ள கிறஸ்துவ பொதுமக்கள் இறந்த தங்கள் முன்னோர்களின் கல்லறைகளில் நவம்பர் மாதம் 2ந்தேதி கல்லறை தோட்டத்தில் கல்லறை திருநாள் அனுசரித்து அவர்களில் ஆன்மா இளைப்பாற வழிபாடு செய்வது வழக்கம். அதுபோல், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை திருத்தலம் கல்லறை தோட்டத்தில் கல்லறை திருநாள் வழிபாடு நடந்தது. இந்த வழிபாட்டையொட்டி, ஏராளமான கிறிஸ்துவர்கள் இறந்த முன்னோர் களின் கல்லறைகளை சுத்தம் செய்து மலர்களால் அலங்கரித்து மெழுகுவத்தி ஏற்றி சாம்பிராணி தூபாம் போட்டு இறந்தவர்களுக்கு பிடித்தமான பொருட்கள் வைத்து அவர்களின் ஆன்மா இளப்பாற வழிபாடு செய்தனர். இந்த வழிபாட்டிற்கு, திருத்தல அதிபர் பங்கு தந்தை ரமேஷ் அடிகளார் ஒவ்வொரு கல்லறைக்கும் சென்று பிரார்த்தனை செய்து தூபமிட்டு அர்சித்து வழிபாடு செய்தார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி
















