திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடன்குளம் அருகே இருக்கன் துறையில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. கல்குவாரியில் ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்த பொழுது பொக்லைன் இயந்திரத்தின் மேல் பாறை சரிந்து விழுந்ததில் அதன் ஓட்டுநர் நாகர்கோயிலை சேர்ந்த அருண்குமார் (49) என்பவர் சிக்கி உயிரிழந்தார்.
விபத்து பற்றி கேள்விப்பட்டவுடன் திருநெல்வேலி மண்டல இணை இயக்குனர், சரவணபாபு உடனடியாக மீட்பு பணிகளுக்கு நாங்குநேரி, வள்ளியூர், ராதாபுரம், ஆகிய தீயணைப்பு மீட்பு படைக்கு உத்தரவிட்டத்தின்படி நாங்குநேரி தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையில் மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுத்து பலியானவரின் உடலை மீட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்