இராமநாதபுரம்: இராமநாதபுரம், நவம்பர் 3, 2025: இராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் அமுதா ராணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இரத்தம் கொடையாளர்கள் பாராட்டு நிகழ்ச்சியில், Twins Ambulance Service நிறுவனத்தின் நசுருதீன் மற்றும் அசாருதீன் ஆகியோர் சமூக நலனுக்காகச் செய்த அர்ப்பணிப்பு பணிக்காக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். நசுருதீன் மற்றும் அசாருதீன் அவர்கள் பல அவசரநேரங்களில் உயிர் காப்பாற்றும் பணிகளில் தன்னலமின்றி ஈடுபட்டு சமூகத்தின் நெஞ்சில் இடம்பிடித்துள்ளனர். இவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் மனிதநேய பணிகள் இராமநாதபுரம் மாவட்டத்திற்கே பெருமை சேர்த்துள்ளன.
இந்த அங்கீகாரம், சமூகத்திற்கு சேவை செய்வோருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக, நசுருதீன் மற்றும் அசாருதீன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்படுகின்றன. இவர்கள் சமூக நலனுக்காக தொடர்ந்து மேலும் பல அற்புதச் சேவைகள் புரிய கடவுள் அருள்புரிவாராக.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி
                                











			
		    

