விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் சட்டம், ஒழுங்கு ஆய்வு கூட்டம் கலெக்டர் திரு.மேகநாத ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய கலெக்டர் திரு.மேகநாதரெட்டி விருதுநகர் மாவட்டத்தில் வாகன விபத்துகளில் உயிரிழப்புகள் அதிகமாக உள்ளது. தலைக்கவசத்தின் பயன் குறித்து போதிய விழிப்புணர்வு பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். பொதுமக்களும் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டுவதை ஊக்குவிக்க போலீசார் மூலமாக அறிவுறுத்த வேண்டும்.என கூறினார். கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு மனோகர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.