மதுரை : மதுரை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு மூலமாக (22.08.2023) அன்று கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மதுரை தெற்கு வட்டம் சின்னமாங்குளம் கிராமத்திலும், மதுரை கிழக்கு வட்டம் விரகனூர் கிராமத்திலும் மற்றும் கள்ளிக்குடி வட்டம் மையிட்டான்பட்டி கிராமத்திலும் “ஒன்றிணைவோம்” என்ற பெயாில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்தும், தீண்டாமை வன்கொடுமை தடுப்பு விதிகள் பற்றியும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலமாக அரசு வழங்கும் நலத்திட்டங்கள் பற்றியும், போதை பொருள் தீமை பற்றியும், சிறார் திருமண தடுப்பு சட்டம் பற்றியும், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் தீண்டாமை ஒழிப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரமும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு சாதி மத பாகுபாடு இன்றி ஒற்றுமையுடன் வாழ வேண்டிய அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எடுத்துரைக்கப்பட்டது. மேற்படி முகாமில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் என்பது தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்
திரு.விஜயராஜ்