இராமநாதபுரம்: மதுரை மாவட்டம் என்பவர் கடந்த 30 வருடங்களாக நகைகளில் ஜாதிகற்கள் பதிக்கும் வியாபாரம் செய்து வருவதாக தெரிகிறது. இவர் கடந்த (24.01.2025)-ம் தேதி சிவகாசியை சேர்ந்த புரோக்கர் ஜாகிர் என்பவரிடம் தன்னிடம் விலை மதிப்பு தெரியாத 7 கிராம் அலெக்ஸ்சான்டர் கல் ரசீதோட விற்பனைக்கு இருப்பதாக தெரிவித்ததும், திருநெல்வேலியை சேர்ந்த ரவி என்பவரை அறிமுகப்படுத்தியதாகவும் ரவி என்பவர் அபுதாஹிர் என்பவரிடம் போனில் தொடர்பு கொண்டு இராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள இரயில்வே கேட்டுக்கு வரச்சொன்னதின் பேரில் அங்கு வந்தவரை 7 நபர்கள் மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.60,000,00/- லட்சம் மதிக்கதக்க அலேக்ஸாண்டர் ஜாதிக்கல்லையும், அதன் ரசீது, போன் மற்றும் ரூ.15000/-பணத்தையும் அச்சுறுத்தி பறித்து விட்டு சென்றதாக வாதி கொடுத்த புகாரின் அடிப்படையில் இராமநாதபுரம் நகர் காவல் நிலைய குற்ற எண் 42/2025 பிரிவு 140(1), 296(b), 311 BNS பிரகாரம் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி