கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜாகடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணகிரி To மகாராஜா சாலையில் ஆத்துக்காவாய் பஸ் ஸ்டாப் அருகே வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் அலுவலர்கள் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது அவ்வழியாக வந்த டிராக்டர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது வாகனத்தின் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். நிறுத்திய வாகனத்தை சோதனை செய்ததில் அனுமதியின்றி உடை கற்கல் இருந்தது. உடை கற்கல் கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து மகாராஜா கடை காவல் நிலையத்தில் ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்