மதுரை: தமிழகத்தில் தற்போது கரோனா கடந்த ஆண்டு கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவித்துள்ளது. குறிப்பாக சலூன் கடைகள் திறக்க தடை விதித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஐ.நா சபை தூதர் நேத்ரா அவரது தந்தை ஐ.நா, சபை பாராட்டு பெற்ற சமூக ஆர்வலர் மோகன் ஆகியோர் நலத்திட்ட உதவிகள் வழங்கினர். அண்ணாநகர் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் துவக்கி வைத்தார்.
சமூக ஆர்வலர் மோகன் கூறியதாவது:
கரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவுகிறது. அரசின் உத்தரவால் சலூன் கடைகள் பூட்டப்பட்டதால் அங்கு பணியாற்றும் தொழிலாளர் குடும்gங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சலூன் கடைகளில் பணியாற்றும் 100 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி நலத்திட்ட உதவிகள் வழங்கி உள்ளேன். மதுரை மாவட்டத்தில் முதன்முதலில் வழங்கப்படுகிறது. இது மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக அமையும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைவரும் உதவி செய்ய வேண்டும் என்றார். செஞ்சிலுவை பேரிடர் மேலான்மை மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், மதுரை சங்க முத்துக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.