மதுரை: மதுரையில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவிவருகிறது. எனவே, வாகனத் தணிக்கையில் ஈடுபடும் போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக் கையுடன் செயல்பட வேண்டும் என்று துணியாலான முகக்கவசம் அணிவதுடன் கூடுதலாக முகம் முழுவதையும் மறைக்கும் வகையிலான பேஸ் ஷீல்டு மாஸ்க்கையும் (அகன்ற முகக் கவசம்) அணிந்து போலீஸார் பணியாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது .
அதோடு பணிக்கு வரும் போலீஸாருக்கு தினமும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல்வெப்ப நிலை பரி சோதனை, பல்ஸ் ஆக்ஸிமீட்டர் மூலம் பரிசோதனை செய்தல், சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்தல் போன்றவற்றையும் கட்டாயப்படுத்த வேண்டும். காவல்நிலைய வளாகத்தில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என்று கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி