ராமேஸ்வரம் : இலங்கை மன்னார் கடற்கரையில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பார்சல் ஒதுங்கியது. தலை மன்னார் தென் கடல் பகுதியில் அந்நாட்டு கடற்படையினர் ரோந்து சென்றனர். கரை ஒதுங்கிய 50 பார்சல்களை கடற்படை வீரர்கள் மீட்டு தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். அதில் 197 கிலோ கஞ்சா இருந்தது. இதன் மதிப்பு ரூ. 50 லட்சம். தமிழகத்தில் இருந்து நாட்டுப்படகில் கடத்தி சென்ற போது இலங்கை கடற்படை கப்பல் வருவதை கண்டு கடத்தல்காரர்கள் கடலில் வீசி தப்பி சென்றிருக்கலாம் என அந்நாட்டு கடற்படையினர் தெரிவித்தனர்.