கரூர்: 79 வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் திரு. M. தங்கவேல், IAS., அவர்கள், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. K. ஜோஷ் தங்கையா.,அவர்கள், கலந்து கொண்டனர். சுதந்திர தின விழாவில் கரூர் மாவட்ட ஆட்சியர் திரு. M. தங்கவேல், IAS., அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திருமதி . K. கோகிலா, அவர்கள் தலைமையிலான காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
மேலும் கரூர் மாவட்டத்தில் சிறப்பான முறையில் பணிபுரிந்த காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர் உட்பட 71 நபர்களுக்கு பதக்கம் மற்றும் நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.