திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மேலப்பிள்ளையார்குளம், தெற்கு தெருவை சேர்ந்த பழனி(39). அழகியபாண்டியபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (24). திருவேங்கடம், குண்டம்பட்டி, வடக்கு தெருவை சேர்ந்த முத்துராஜ் (23). பலஸ்தினாபுரத்தை சேர்ந்த அந்தோணிராஜ் (25). ஆகிய நான்கு பேரும் தெற்கு வாகைகுளம் அருகே லாரியில் கருங்கல்லை எந்த ஒரு அனுமதியும் இன்றி சட்ட விரோதமாக ஏற்றிக் கொண்டிருந்தனர். இது குறித்து மானூர் காவல் உதவி ஆய்வாளர், சஜீவ் வழக்கு பதிவு செய்து நால்வரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 5 யூனிட் கருங்கல், இரண்டு டிப்பர் லாரி மற்றும் ஒரு கிட்டாச்சியை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்