திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி பகுதியில், காவல் உதவி ஆய்வாளர், ஆறுமுகம் தலைமையிலான காவல்துறையினர், ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, பள்ளக்கால் பொதுக்குடியைச் சேர்ந்த முருகன்(44). என்பவர் ஓட்டி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, எந்தவித அனுமதியும் இன்றி சட்டவிரோதமாக கருங்கல்லை எடுத்து வந்தது தெரிய வந்தது. இது குறித்து, வழக்கு பதிவு செய்த பாப்பாக்குடி காவல் ஆய்வாளர், பாரத் லிங்கம் முருகனை கைது செய்து அவரிடமிருந்த 1½ யூனிட் கருங்கல் மற்றும் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















