தென்காசி: தென்காசி மாவட்டம் பாரம்பரிய கராத்தே டூ ஒகினாவா கோபுடோ இந்தோ கியோகாய் அமைப்பு ஆன்லைன் வாயிலாக உலக கராத்தே & மார்ஷியல் ஆர்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது.
மேற்படி போட்டியில் 30 நாடுகளை சேர்ந்த 520 மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள்.இதில்இந்திய அளவில் தமிழ்நாடு சார்பில் தென்காசி மாவட்ட இஷின்ரியூ கராத்தே தலைமை பயிற்சியாளர் & தேர்வாளர் சென்சாய் கோபி அவர்கள் தலைமையில் 20 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு
வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை உற்சாகம் மற்றும் ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ்.IPS அவர்கள் வழங்கி தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
தற்காப்பு கலை என்பது அனைவருக்கும் அறிந்திருக்க வேண்டிய ஒன்று எனவும் அதில் சிறப்பாக செயல்பட்டு இந்த சிறிய வயதில் பரிசுகளையும் பதக்கங்களையும் வென்ற நீங்கள் வாழ்வில் இன்னும் பெரிய இலக்கை அடைய வேண்டும் என்று தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்..