கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கர்நாடக மதுபானத்தை கள்ளத்தனமான விற்பனை செய்வதாக காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் போலீசார் பேருந்து நிலையத்திற்கு பின்புறம் சந்தேகத்தின் பேரில் ஒருவர் அப்பகுதியில் இருந்தனர். அவரை சோதனை செய்த போது அவரிடம் கர்நாடக மதுபானம் விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் அவரின் விசாரனை செய்த போது வசிம் (25) நேருநகர் பகுதியை சேர்ந்தவர் என்ற தெரியவந்தது. மேலும் அவரை கைது செய்து குற்ற எண் 65/2024 U/s 4 (1) (a) r | w 4(1-A)TNP Act கெலமங்கலம் காவல் துறையினர்கள் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் , ஓசூர் டவுன் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது ஓசூர் ராயக்கோட்டை ரோட்டில் உள்ள முல்லை நகர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை செய்தபோது விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்து வழக்குப் பதிந்து எதிரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்