தேனி: தேனி பழனிசெட்டிபட்டியில் சாலையோரம் வாகன பராமரிப்பு நிலையத்தை நடத்தி வந்த, ராமராஜன் கார் பராமரிப்பு நிலையத்தின் உள்ளே புகுந்து கம்ப்யூட்டர்கள் திருடப்பட்டன.
அதே நாளில் சுந்தர் எனபவரின் வாகன பராமரிப்பு நிலையத்தில் இரண்டு கம்ப்யூட்டர்கள் திருடப்பட்டன இதனை அடுத்து தொடர்ந்து கம்ப்யூட்டர் மற்றும் டிவி போன்ற பொருட்கள் மாவட்டம் முழுவதும் திருடு போயின.
இந்த சம்பவம் குறித்து தேனி டி.எஸ்.பி. திரு.முத்துராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் தேடி வந்தனர். இதில் கூடலூரை சேர்ந்த அய்யர் தேவர் மகன் செந்தில்குமார்(31), என்பதும் இவர் தற்போது, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கிராமத்தில் வசிப்பதும் தெரியவந்தது.
போலீஸ் தனிப்படை இவரை கைது செய்து இவரிடம் இருந்த 14 கம்ப்யூட்டர்கள் மற்றும் திருட்டிற்கு பயன்படுததிய கார் பறிமுதல் செய்தனர்.