கிருஷ்ணகிரி: உத்தனப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாகமங்கலம் கிராமத்தில் உள்ள TATA JASMINE என்ற கம்பெனியில் வினோத் என்பவர் உதவி மேலாளராக பணிபுரிந்து வருவதாகவும், அதே கம்பெனியில் செக்யூரிட்டி ஆபிஸர் ஆக பணிபுரியும் உசேன் என்பவர் (06.03.2026) ஆம் தேதி இரவு சுமார் 12.54 மணியளவில் கம்பெனி மேலாளராக ஆக பணிபுரியும் வினோத்துக்கு போன் செய்து காப்பர் ஒயர்களை யாரோ அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் எடுத்துக்கொண்டு ஓடி விட்டதாகவும் தகவல் தெரிவித்தார் வினோத் கம்பெனிக்கு வந்து பார்த்தபோது அங்கு கம்பெனியில் வைத்திருந்த காப்பர் ஒயர்கள் காணவில்லை, என்றும் வினோத் என்பவர் உத்தனப்பள்ளி காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து காப்பர் ஒயர்களை திருடிய மூன்று நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.















