திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வி.கே.புரம், டாணா, தெற்கு தெருவை சேர்ந்த அன்னுமியான் (45). என்பவருக்கு சொந்தமான வீட்டில் அதே ஊரைச் சேர்ந்த மகேஷ் (47). என்பவரின் உடன் பிறந்த சகோதரி வாடகைக்கு குடியிருந்து வருகிறார். மேலும் மகேஷின் அக்கா வாடகை முறையாக கொடுக்காமல் இருந்து வந்ததால் அன்னுமியான் வீட்டை காலி செய்யும்படி கூறியதை மனதில் கொண்டு, அன்னுமியான் வீட்டின் முன்பு நின்றிருந்த அவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை மகேஷ் இரும்பு கம்பியால் தாக்கி சேதப்படுத்துவதை பார்த்த அன்னுமியான் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகேஷ் அன்னுமியானை கம்பியால் தாக்கி, தடுக்க வந்த அவரது மனைவியையும் மிரட்டி விட்டு சென்றுள்ளார். இது குறித்து அன்னுமியான் வி.கே.புரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வி.கே.புரம் காவல் ஆய்வாளர், சுஜித் ஆனந்த் வழக்கு பதிவு செய்து மகேஷை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்