கன்னியாகுமரி: கன்னியாகுமரி சுற்றுலாத்தலமான திரிவேணி சங்கமத்தில் புதிதாக கட்டப்பட்ட நவீன புறக்காவல் நிலையத்தை (Police Out Post) கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள் (07-12-2025) திறந்து வைத்தார்கள். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் இந்த நவீன புறக்காவல் நிலையத்தில் இருந்து சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்க ஏதுவாக நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியின் போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மதியழகன் (குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு), கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. நாகசங்கர் (இணையவழி குற்றப்பிரிவு), கன்னியாகுமரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயச்சந்திரன், கன்னியாகுமரி காவல் நிலைய ஆய்வாளர் திரு. சுந்தர்ராஜ் பெருமாள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.
















