கன்னியாகுமரி: கேரள தமிழக எல்லையான கன்னியாகுமரி, களியக்காவிளை சோதனை சாவடியில் பாதுகாவலில் இருந்த வில்சன் என்ற சிறப்பு உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரத்தில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது காரில் இருந்த மர்ம கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கி சூடு எதிரொலியாக மர்ம காரையும், மர்ம நபர்களையும் பிடிக்க, தென்காசி மாவட்ட பகுதியிலும், தமிழக கேரள எல்லையான செங்கோட்டை, புளியரை உள்பட்ட பகுதியிலும், காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கி சூட்டில் சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழந்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ள காவல்துறையினர் , தப்பி ஓடியவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.