திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்டளை பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் 44. என்பவர் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவர் தொடர்ந்து ஜல்லி, மணல், கிரசர் பொடி போன்ற கனிமப் பொருட்களை முறைகேடாக, புளுமெட்டல் நிறுவனத்தின் பெயரில் போலியான ரசீது தயார் செய்து டிரான்ஸ்போர்ட்டிற்கு பயன்படுத்தியது தெரியவந்தது.
மேற்படி சம்பவம் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப., அவர்களின் கவனத்திற்கு வந்ததால் குற்றவாளியை உடனடியாக கைது செய்யும்படி உத்தரவிட்டதின் பேரில் உதவி ஆய்வாளர் திரு. ஐயப்பன், அவர்கள் விசாரணை மேற்கொண்டு போலி ரசீது தயாரித்து கனிம முறைகேட்டில் ஈடுபட்ட வெங்கடாசலம் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
மேலும் குற்றவாளியிடம் இருந்து போலி ரசீது தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கணினி மற்றும் அச்சு இயந்திரத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.