தேனி: தேனி, கம்பம் வடக்கு காவல் நிலைய எல்கைக்குட்பட்ட கம்பம் நகர்ப்பகுதி கனரக வாகன உரிமையாளர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காவல் ஆய்வாளர் திரு.சிலைமணி அவர்கள் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் திரு.வினோத்ராஜா, திரு.மணிகண்டன் ஆகியோர்கள் வாகன உரிமையாளர்கள் தங்களது கனரக வாகனத்தில் அதிக பாரம் ஏற்றுதல், அதிக உயரத்தில் சரக்குகளை ஏற்றுதல், அதிகப்படியான ஒலி எழுப்பி அதி வேகமாக வாகனங்களை இயக்குதல் போன்ற தவறுகளை செய்யக்கூடாது என்று கூறி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் 20க்கும் மேற்பட்ட வாகன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.