திருச்சி : திருச்சி மாநகரில் கடந்த (13.11.2023)-ந்தேதி அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமகள் தெருவில் நடந்து சென்ற நபரிடம் கத்தியை காண்பித்து பணத்தை கொள்ளையடித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேல அம்பிகாபுரத்தை சேர்ந்த ரவுடி வெற்றி @ வெற்றிவேல் என்பவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில் ரவுடி வெற்றி @ வெற்றிவேல் என்பவர் மீது திருச்சி மாநகரத்தில் கொலை, கத்தியை காண்பித்து பணம் பறித்ததாக 5 வழக்குகளும், திருச்சி மாவட்டத்தில் வழிபறியில் ஈடுபட்டதாக 4 வழக்குகளும், தஞ்சாவூர் மாவட்டத்தில் வழிப்பறி செய்ததாக 5 வழக்குகளும், பூட்டியிருந்த வீட்டில் திருடியதாக 2 வழக்குகளும், அரியலூர் மாவட்டத்தில் வழிப்பறி மற்றும் பணத்தை பறித்த்தாக 3 வழக்குகள் உட்பட மொத்தம் 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளதாக தெரியவந்தது.
கடந்த (05.11.2023)-ந்தேதி அமர்வு நீதிமன்ற எல்லைக்குட்பட்ட கலெக்டர் அலுவலகம் ரோட்டில் உள்ள ஹோட்டலில் ஸ்பா (SPA) நிலையத்தில் பெண்கள் மற்றும் சிறுமியை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் திடீர் சோதனை செய்ததில் அங்கு ராஜாகாலனியை சேர்ந்த குற்றவாளி ராம்குமார் மற்றும் நான்கு நபர்கள் பெண்கள் மற்றும் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தியவர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, குற்றவாளி வெற்றி @ வெற்றிவேல் என்பவர் தொடர்ந்து திருட்டு, வழிப்பறி மற்றும் கொள்ளையடித்து செல்லும் செயல்களில் ஈடுபவர் எனவும், குற்றவாளி ராம்குமார் பெண்கள் மற்றும் சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்பவர் எனவும் விசாரணையில் தெரியவந்ததால், மேற்கண்ட குற்றவாளிகளின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு சம்மந்தபட்ட காவல் ஆய்வாளர்கள் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள்.