திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த (14.01.2026) ம்தேதி தெய்வ சிகாமணிபுரத்தைச் சேர்ந்த தேவ சதீஷ்குமார் (47). என்ற ஆட்டோ ஓட்டுநரை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜவகர் நகர் பகுதியைச் சேர்ந்த குருவி சரவணன் (எ) சரவணகுமார் (40).புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த கண்ணா (எ) ஜெய கிருஷ்ண கண்ணன் (22). மற்றும் ரவுண்ட் ரோடு புதூர் பகுதியைச் சேர்ந்த அஜித் சுரேந்தர் (25). ஆகிய மூன்று நபர்களை நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் குருவி சரவணன் (எ) சரவணகுமார் மற்றும் கண்ணா (எ) ஜெயகிருஷ்ண கண்ணன் ஆகிய இருவரின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் நகர் வடக்கு காவல் ஆய்வாளர் திரு.வெங்கடாசலபதி அவர்களின் வேண்டுகோளின் படி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.சரவணன் இ.ஆ.ப அவர்கள் மேற்கண்ட 02 நபர்களையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க நேற்று (13.02.2026) உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல்துறையினர் மேற்கண்ட 02 நபர்களையும் குண்டர் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் இந்தாண்டு இதுவரை 19 குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















