திண்டுக்கல்: திண்டுக்கல், வடமதுரையை அடுத்த V.சித்தூரை சேர்ந்த பெரியசாமி மகன் கவியரசன்(28) இவர் தனது அக்கா தோட்டத்தில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த வடமதுரை சேர்ந்த பழனிச்சாமி மகன் சரவணபிரபு(26). அசிங்கமாகவும் ஆபாசமாகவும் பேசியதாக கூறப்படுகிறது இதனை கவியரசன் தட்டி கேட்டதற்கு சரவணபிரபு பட்டாகத்தியை காட்டி உயிர் பயத்தை ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கவியரசன் வடமதுரை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வடமதுரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தாவூத்உசேன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட சரவணபிரபுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா