திண்டுக்கல் : பழனி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயக்குமார் தலைமையிலான போலீசார் அடிவாரம் பகுதியில் ரோந்து சென்ற போது மதனபுரம் வாய்க்கால் பகுதியில் சந்தேப்படும்படி 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து சோதனை செய்தபோது, அவர்களிடம் கத்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அவர்கள், அடிவாரத்தை சேர்ந்த சக்திவேல் (31).பிரதீஷ்(27). என்பதும், கையில் கத்தியுடன் சுற்றி திரிந்ததும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்தனர். கைதான 2 பேர் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி