திருவண்ணாமலை : கீழ்பென்னாத்தூர் அடுத்த கருங்காலி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயராஜ் மகன் அஸ்வீ ன் குமார்(19) பி எஸ் சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் செந்தாமரைக்கண்ணன்(33) ஆட்டோ ஓட்டுநர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அஸ்வின்குமாரிடம் கீழ்பென்னாத்தூர் பகுதிக்கு சென்று வரலாம் என்று அழைத்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த அஸ்வின் குமாரை, செந்தாமரைக்கண்ணன் கத்தியால் குத்தி உள்ளார். இதையடுத்து பலத்த காயமடைந்த அவரை மீட்ட அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
கீழ்பென்னாத்தூர் காவல் ஆய்வாளர் சியாமலா, உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து செந்தாமரைக் கண்ணனை கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்