திருநெல்வேலி : வீரவநல்லூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளர் திரு.முருகன் அவர்கள், தலைமையிலான போலீசார் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை தொடர்ந்து கண்காணித்து விற்பனை செய்பவர்களை கைது செய்து குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் வீரவநல்லூர் போலீசாருக்கு வீரவநல்லூர் மற்றும் சுற்றுபுற பகுதியில் குட்கா பொருட்களை மினி லாரியில் எடுத்து வந்து சப்ளை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அப்பகுதியில் அடிக்கடி வாகன தணிக்கையில் ஈடுபட்டு கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில் (30.11.2022)-ம் தேதி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் காருகுருச்சி அருகே வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த மினி கண்டெய்னர் லாரியை பிடித்து சோதனை செய்தனர். அப்போது கண்டெய்னர் லாரி உள்ளே இரகசிய அறை ஒன்று அமைத்திருந்தது தெரியவந்தது. மேற்படி அறையை திறந்து பார்த்ததில் சுமார் 12 இலட்சம் மதிப்புள்ள 574 கிலோ புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. மேற்படி புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து புகையிலை பொருட்களை எடுத்து வந்த கரூர் மாவட்டம், சமத்துவபுரத்தை சேர்ந்த சிவக்குமார்(46), என்பவரை போலீசார் கைது செய்து லாரியை பறிமுதல் செய்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்