திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015-ஆம் ஆண்டு பழைய ஆயக்குடியைச் சேர்ந்த ஆனந்த் என்பவரை கொலை செய்த வழக்கில் மனைவி நாகேஸ்வரி(45). என்பவரை ஆயக்குடி காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு பழனி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப்., இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி ஆயக்குடி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.காயத்ரி அவர்கள், நீதிமன்ற முதன்மை காவலர் திருமதி. பூங்கொடி அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் திரு.சிவக்குமார் அவர்களின் சீரிய முயற்சியால் இன்று (05.04.2024)-ம் தேதி பழனி கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி நாகேஸ்வரிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா