தென்காசி: தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாசுதேவநல்லூர் பசும்பொன் தெருவை சேர்ந்த கருப்பசாமி என்பவரை கடந்த 2013 ஆம் ஆண்டு கொலை செய்த வழக்கில் அவரின் மனைவியான மகேஸ்வரி, மற்றும் பசும்பொன் தெருவை சேர்ந்த பொன்னையா என்பவர் மகன் மாரியப்பன் @ மாரிசாமி(70). இல்லத்துப் பிள்ளைமார் தெருவை சேர்ந்த சிவசுப்பிரமணி என்பவர் மகன் பொன்ராஜ் (50). ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் வழக்கின் விசாரணையானது தென்காசி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கை விசாரணை செய்த நீதிபதி திரு.ராஜவேலு அவர்கள் குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேற்படி வழக்கில் திறம்பட விசாரணை செய்து, சாட்சிகளை விரைவாக ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்த வாசுதேவநல்லூர் காவல்துறையினருக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.அரவிந்த அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.















