திண்டுக்கல்: திண்டுக்கல், சந்தைப்பேட்டை ரோடு, நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் சரவணப்பெருமாள்(45). இவர் அதே பகுதியில் ஸ்ரீராம் ஹார்டுவேர் என்ற கடையை நடத்தி வந்தார். இந்நிலையில் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் மன உளைச்சலில் கடையில் கயிறால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் சார்பாக முனியாண்டி மற்றும் காவலர்கள் சரவணபெருமாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா