திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி பகுதியை சேர்ந்தவர் உசேன் மகன் ஹாஜா முகைதீன். (54). அப்பகுதியில் கடை வைத்து நடத்தி வருகிறார். சந்தேகத்தின் பேரில் இவரது கடையை ஏர்வாடி காவல் துறையினரும் உணவு பாதுகாப்புத்துறையினரும் சோதனை செய்தபோது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிய வந்தது இதனையடுத்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி அனுடேனி கடை உரிமையாளருக்கு ரூ. 25,000/- அபராதம் விதித்தும், உணவு பாதுகாப்பு துறையால் வழங்கப்பட்ட உணவு உரிமம் மற்றும் பதிவு சான்றையும் தற்காலிகமாக இடைக்கால ரத்து செய்து கடைக்கு சீல் வைத்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்