தென்காசி: தென்காசி மாவட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு G.S.மாதவன் T.P.S., அவர்களின் உத்தரவின் பேரில் (14.03.2026) கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் முதல் குமந்தாபுரம் கிங்ஸ் யுனிவர்ஸ் பள்ளி வரை (சுமார் 5 கி.மீ) தென்காசி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு. சங்கர் அவர்கள் (தலைமையிடம்), திரு. ஜூலியஸ் சீசர் (சைபர் கிரைம்) ஆகியோர் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைப்பெற்றது. இதில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு. முருகேசன், 05 காவல் ஆய்வாளர்கள், 02 சார்பு ஆய்வாளர்கள், 32 துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர், 35 காவலர்கள், 10 ஆயுதப்படை காவலர்கள், 25 தமிழ்நாடு சிறப்பு காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.















