திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே நெய்க்காரப்பட்டி, பாப்பம்பட்டி, வயலூர், கோதைமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 30க்கும் மேற்பட்ட கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். இதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்த 9 கடைகளுக்கு அதிரடியாக சீல் வைத்தனர். இக்கடைகளுக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் வீதம் 2.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இக்கடைகளில் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 3.5 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா