கிருஷ்ணகிரி : ஓசூர் மாநகரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்கவும் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தி வருவதாக வந்த புகாரின் அடிப்படையில் ஓசூர் மாநகர தலைமை சுகாதார அலுவலர் பிரபாகர் தலைமையிலான 10க்கும் மேற்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் ஓசூர் நாமல்பேட், ஜனப்பர் தெரு, தாலுகா அலுவலகம் சாலை, பூ மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சில கடைகளில் இருந்து பிளாஸ்டிக் கவர்கள் பண்டல் பண்டலாக பறிமுதல் செய்யப்பட்டது. முதற்கட்டமான சோதனையில் 20க்கும் க்கும் மேற்பட்ட கடைகளில் மட்டுமே சுமார் 122 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் கண்டெடுக்கப்பட்டு, ஒரு கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் என 122 கிலோவுக்கு ஒரு லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். அபராதம் கட்ட தவறினால் கடைக்கு சீல் வைப்பதாகவும், தொடர்ந்து இந்த சோதனைகள் நடைபெறும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்