காஞ்சீபுரம்: தமிழகம் முழுவதும் கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் வரும் மே 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அமல் படுத்தி உள்ளது. இந்த ஊரடங்கு விதிகளில் இன்று முதல் முதல் தமிழகத்தில் டீ கடைகள் இயங்க அனுமதியில்லை. காய்கறி, மளிகைக் கடைகள், இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் காலை10 மணி வரை மட்டுமே இயங்கும் என்று அறிவித்துள்ளது.
மேலும் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கினர்.
அதன்படி காஞ்சீபுரம் பேருந்து நிலைய பகுதியில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சண்முகபிரியா தலைமையில் துணை காவல் கண்காணிப்பாளர் மணிமேகலை முன்னிலையில் இருசக்கர வாகனங்களில் சென்றவர்களை நிறுத்தி வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்












