கன்னியாகுமரி : தேதி காலை 06:00 மணி முதல் சாகர் கவாச் நடத்தி தீவிரவாதி தடுப்பு ஒத்திகை நடவடிக்கை எடுக்க உத்தரவுபடி கடலோர பாதுகாப்பு குழும சோதனை சாவடிகளில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வாகன சோதனை கன்னியாகுமரி மாவட்ட கடலோர சோதனை சாவடிகளில் நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்றும் (21/11/2025) ம் தேதி காலை 08:00 மணி முதல் கன்னியாகுமரி கடலோர காவல் படை காவல் ஆய்வாளர் திருமதி. K. சாந்தி மற்றும் உதவி ஆய்வாளர் திரு. S. கதிரவன் மற்றும் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. ஆனந்த், திரு.நாராயண பெருமாள், தலைமை காவலர் சுனில்குமார் ஆகியோர்கள் சகிதம் மகாதானபுரம் கடலோர சோதனை சாவடியில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது சந்தேகத்தின் பேரில் வந்து கொண்டிருந்த ஆட்டோவை சோதனை செய்த போது கூடங்குளம் அணுமின் நிலையத்தை தாக்க டம்மி பாமுடன் வந்த Red force (தமிழ்நாடு கமாண்டோ படையை) சேர்ந்த இரு நபர்களை பிடித்து கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும அலுவலகத்தில் வைத்து காவல் ஆய்வாளர் அவர்கள் விசாரித்து வருகிறார்கள்.”
















