கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார், IPS அவர்கள், புவனகிரியில் உள்ள பூவராகவசுவாமி திருக்கோயிலில் நடைபெறும் பாதுகாப்பு பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது கோயில் வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களில் மேற்கொள்ளப்பட்டிருந்த காவல் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். மேலும், பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு பாதுகாப்பு பணிகளை சிறப்பாக மேற்கொள்ள தேவையான அறிவுரைகளையும் வழங்கினார்.
















