கடலூர்: தமிழ்நாடு கூடுதல் காவல்துறை இயக்குனர் (சட்டம் & ஒழுங்கு) முனைவர் மகேஸ்வர் தயாள், ஐ.பி.எஸ்., அவர்கள் கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் அதிகாரிகளுடன் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் விழுப்புரம் சரக துணைத் தலைவர் திரு. ARA. அருளரசு, ஐ.பி.எஸ்., கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார், ஐ.பி.எஸ்., கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு. என். கோடீஸ்வரன், திரு. வி. ரகுபதி மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு நிலை, குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
















