கடலூர் : கடலூர் மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று (12.01.2026) கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார், ஐ.பி.எஸ்., அவர்கள் காவல்துறை வாகனங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது காவல்துறை வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா, அவை செயல்படத் தயாரான நிலையில் உள்ளதா என்பதைக் குறித்து கவனம் செலுத்தினார். மேலும், அவசர காலங்களில் பயன்படுத்தப்படும் தீயணைப்பு கருவிகள் சரியான நிலையில் உள்ளனவா என சோதனை மேற்கொண்டார். ஆய்வின் முடிவில், காவல்துறை வாகனங்களை எப்போதும் நல்ல நிலையில் பராமரித்து, அவசர கால சேவைகளுக்கு தடை இல்லாமல் செயல்பட வேண்டும் என காவலர்களுக்கு தேவையான அறிவுரைகள் வழங்கினார். இந்த ஆய்வில் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.
















