கடலூர் : கடலூர் சிறகுகள் மற்றும் பாடலீஸ்வரர் செல்வ பயிற்சி பள்ளி சார்பாக டெல்லியில் நடைபெற்ற 77வது குடியரசு தினவிழா அணிவகுப்பில் NCC பிரிவில் பங்கேற்ற கடலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகளைக் கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் IPS அவர்கள் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளை பாராட்டி வாழ்த்தி பேசினார். தேசிய அளவில் கடலூர் மாவட்டத்தை பெருமைப்படுத்திய மாணவர்களின் சாதனை பாராட்டத்தக்கது என அவர் தெரிவித்தார்.
















