கடலூர்: கடலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மனமகிழ் மன்றத்தை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் இ.கா.ப. அவர்கள் திறந்து வைத்தார். காவலர்கள், காவல் குடும்பத்தார்கள் மற்றும் சிறுவர்கள் பயன்பெறும் வகையில் இந்த மன்றத்தில் விளையாட்டு உபகரணங்கள், பொது அறிவு தொடர்பான புத்தகங்கள் மற்றும் TNPSC தேர்வுக்கான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நிகழ்ச்சியில் ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. அப்பாண்டைராஜ், காவல் ஆய்வாளர் திரு. முத்துக்குமரன் உள்ளிட்ட காவலர்கள் மற்றும் காவல் குடும்பத்தார்கள் கலந்து கொண்டனர்.
















