கடலூர்: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகளுக்கான மகளிர் தின விழா கடலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண் காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தார்.
மேலும் நிகழ்ச்சியில் பெண் காவலர்கள் மற்றும் காவலர்களின் பெண் குழந்தைகள் கலந்து கொண்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கினர். இதில் துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு. தமிழ்இனியன், திரு. அப்பாண்டராஜ் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
















