கடலூர் : கடலூர் மாவட்டம் காவல்துறையினரால் குட்கா போதை பொருட்கள் குற்ற வழக்கில் கைப்பற்றப்பட்ட போதை குட்கா பொருட்களை அழிக்க நீதிமன்றம் மூலம் உத்தரவு பெறப்பட்டது. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்களின் உத்தரவின்பேரில், இன்று கடலூர், சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, நெய்வேலி விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி ஆகிய ஏழு உட்கோட்ட காவல் நிலையங்களில் கைப்பற்றப்பட்ட குட்கா போதை பொருட்கள் கடலூர் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் உணவு தடுப்பு பிரிவு அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் போதை பொருட்கள் தீ வைத்து கொளுத்தி முற்றிலுமாக அழிக்கப்பட்டது.
















