கடலூர் : கடலூர் மாவட்டத்தில் காவல் துறையினரால் பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களும் ஆண்டுதோறும் மாவட்ட காவல் சூப்பிரண்டால் ஆய்வு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு காவல் வாகனங்களை ஆய்வு செய்வதற்காக, அந்தந்த போலீஸ் நிலையங்களை சேர்ந்த காவல் துறையினர் , தாங்கள் பயன்படுத்தும் வாகனங்களை கடலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்திற்கு கொண்டு வந்தனர். அப்போது சூப்பிரண்டு திரு. சக்தி கணேசன், அந்த வாகனங்களை பார்வையிட்டு அவை சரியாக பராமரிக்கப்படுகிறதா? என்றும், எரிபொருள் சரியாக பயன்படுத்துகிறார்களா? எனவும், வாகனங்களின் பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது ஆயுதப்படை துணை சூப்பிரண்டு திரு. சவுந்தர்ராஜன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.செந்தில்விநாயகம், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. அருட்செல்வம், அரசு தானியங்கி பணிமனை பொறுப்பாளர் பாலசுப்பிரமணியம், வாகன பிரிவு உதவி ஆய்வாளர் திரு. ராமச்சந்திரன், ஆகியோர் உடனிருந்தனர்.