கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் உத்தரவின்பேரில், கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் கடலூர் மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு ஊர்க்காவல் படை வட்டார தளபதி திரு. A. அம்ஜத்கான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. P. அப்பாண்டைராஜ், காவல் ஆய்வாளர்கள் திருமதி பத்மா மற்றும் திரு. நாகராஜன் ஆகியோர் முன்னிலையில் தேர்வு நடைப்பெற்றது. இன்றைய உடல் தகுதி தேர்வில் நீச்சல் திறன், மார்பளவு உயரம், கடற்கரை மணலில் ஓட்டம் உள்ளிட்ட உடற்தகுதி பரிசோதனைகள் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தப்பட்டன. இதில் பலர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
















