கடலூர்: காவல் நிலையத்தின் பார்வையாளர்கள் அமரும் அறை இது என்றால் நம்ப முடிகிறதா.! அதுவும் ஒரு தாலுகா காவல் நிலையம்..! ஆனால் அதுதான் உண்மை..!
ஒரு தேர்ந்த கார்ப்ரேட் நிறுவனத்திற்குள் இருக்கின்ற மாதிரி அழகும் நேர்த்தியும் வசதியும் அடர்ந்து கிடக்கின்றது..! இதே காவல்நிலையத்தை ஒரு ஆண்டுக்கு முன்பு பார்த்திருந்தால் மட்டுமே ஒரு மாதத்தில் இப்படி பொலிவு அடைந்திருப்பதற்கு பின்னால் இருக்கும் கடின உழைப்பும் திட்டமிடலும் விளங்கும்.!
காவல் நிலைய ஆய்வாளர் திரு.அம்பேத்கார்
வந்தோம், வேலை செய்தோம், போனோம் என்றில்லாமல் தன்னுடைய வீடு போல பார்த்து பார்த்து அழகு படுத்தி வசதிபடுத்தி எளிய மக்கள் தயக்கமின்றி வந்து போக சாத்தியப்படுத்தி இருக்கிறார் காவல் நிலைய ஆய்வாளர் திரு.அம்பேத்கார்.
ஓராண்டுக்கும முன்பு இதே காவல் நிலையத்திற்கு செல்வோரிடம், புதர்கள் சூழ்ந்த கட்டிடமாக இருந்தது. அப்போது ஒரு காவலர் “அய்யா பாம்பு வரும் பார்த்து”என்று சொல்வார். அத்தகைய ஒரு கட்டிடம் இப்படி அழகும் அன்பும் சூழ்ந்த இடமாக மாற்றம் கண்டிருப்பது வியப்பாகவும், மகிழ்வாகவும் இருக்கிறது.
இப்படி அழகுபடுத்த காரணம் வெறும் தோற்ற பொலிவிற்காக மட்டுமல்லல அழகாக உடையணியும் போது எப்படி ஒரு தன்னம்பிக்கை வருதோ அதுபோலவே பணி செய்யும் இடத்தை ரம்மியமாக வைத்திருப்பதும் ஒரு தன்னம்பிக்கையை தரும். மேலும் காவல் நிலையம் வருவோரிடம் அன்பாக பேச காவலர்களை அது தூண்டும்”என அழகாக புன்னகைக்கிறார் காவல் ஆய்வாளர் திரு.அம்பேத்கார்.